’கோட்’ படப்பிடிப்பு ஓவர்.. லண்டனில் கணவருடன் என்ஜாய் பண்ணும் சினேகா.. எப்படி இருக்காங்க பாருங்க! | GOAT Actress Sneha and Prasanna's London trip photos goes trending - Tamil Filmibeat
    twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ’கோட்’ படப்பிடிப்பு ஓவர்.. லண்டனில் கணவருடன் என்ஜாய் பண்ணும் சினேகா.. எப்படி இருக்காங்க பாருங்க!

    |

    சென்னை: நடிகை சினேகா தனது கணவர் பிரசன்னாவுடன் திருமண நாளை கொண்டாட லண்டனுக்கு சென்ற நிலையில், அங்கே எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. நடிகர் பிரசன்னா இந்தியில் சமீபத்தில் நடித்து வெளிவந்த 'ராநீதி' வெப்சீரிஸ் ஜியோ சினிமாவில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    சிங்கம் சூர்யா மாதிரி கடா மீசை வைத்துக் கொண்டு தனது நடிப்பில் பட்டையை கிளப்பி உள்ளார். பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், தொடர்ந்து வெப்சீரிஸ்களில் நடித்து வருகிறார் பிரசன்னா.

    GOAT Actress Sneha and Prasanna s London trip photos goes trending

    நடிகை சினேகா சின்னத்திரையில் ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக செயல்பட்டு வரும் நிலையில், வசீகரா படத்துக்குப் பிறகு மீண்டும் விஜய்யுடன் 'கோட்' படத்தில் நடித்துள்ளார்.

    தனுஷ் முதல் விஜய் வரை: அம்மா நடிகையாக சினேகா மாறினாலும், அந்த கதாபாத்திரத்தில் நடிக்கும் போது நடிகர்களின் ஜோடியாகவே நடித்து வருகிறார் சினேகா. தனுஷுக்கு ஜோடியாகவும் அம்மாவாகவும் பட்டாஸ் படத்தில் நடித்த சினேகா தற்போது விஜய்க்கு அம்மாவாகவும் ஜோடியாகவும் 'கோட்' படத்தில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'வேலைக்காரன்' படத்திலும் குழந்தை ஒன்றுக்கு அம்மாவாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

    GOAT Actress Sneha and Prasanna s London trip photos goes trending

    வசீகரா: சிம்ரன், ஜோதிகா, திரிஷா போல பல படங்களில் விஜய்யுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு சினேகாவுக்கு கிடைக்கவில்லை என்றாலும் விஜய்யுடன் அவர் இணைந்து நடித்த 'வசீகரா' திரைப்படத்தை எப்போது பார்த்தாலும் ஃபன் கியாரண்டி என்றே சொல்லலாம். கட்டபொம்மனாக வடிவேலு ஒரு பக்கம் காமெடியில் கலக்க விஜய் மற்றும் சினேகா இடையே ஏற்படும் காதல் காட்சிகள், அந்த சாம்பார் ஸ்பைடர்மேன் காட்சிகளை எல்லாம் மறக்கவே முடியாது.

    இறுதிக்கட்டத்தில் கோட்: வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான 'கோவா' படத்தில் நடித்த சினேகா தற்போது விஜய்யை வைத்து வெங்கட் பிரபு இயக்கி உள்ள 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் அந்த படத்தின் படப்பிடிப்பை சினேகா முழுவதுமாக முடித்த நிலையில், லண்டனுக்கு தனது கணவருடன் ஜாலி டூர் சென்றுள்ளார்.

    GOAT Actress Sneha and Prasanna s London trip photos goes trending

    லண்டனில் சினேகா: சினிமா பிரபலங்கள் பலரும் தங்கள் கோடை விடுமுறையை கொண்டாட வெளிநாடுகளுக்கு படையெடுத்து வருகின்றனர். கடந்த வாரம் தங்கள் 12வது ஆண்டு திருமண நாளை கொண்டாட சினேகா மற்றும் பிரசன்னா சென்ற நிலையில், ஏகப்பட்ட போட்டோக்களை லண்டனில் அவர்கள் எடுத்து தள்ளியுள்ளனர். அந்த புகைப்படங்களை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருவரும் வெளியிட்டு லைக்குகளை அள்ளியுள்ளனர்.

    செம ஸ்லிம்மாக: நடிகை சினேகாவுக்கு 42 வயதாகி விட்டது என்று சொன்னால் யாருமே நம்ப மாட்டார்கள். அந்தளவுக்கு செம ஸ்லிம்மாக முகத்தோற்றத்தையும் உடல் அமைப்பையும் செம ஃபிட்டாகவும் க்யூட்டாகவும் பராமரித்து வருகிறார். ஆனந்தம் படத்தில் பார்த்தது போலவே இருக்கீங்களே சினேகா என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

    GOAT Actress Sneha and Prasanna s London trip photos goes trending

    சினேகாவின் செல்லப்பெயர்: நடிகர் பிரசன்னா திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிவிட்டதாக பதிவிட்டு சினேகாவுக்கு நன்றி தெரிவித்த போது ஹேப்பி ஆனிவர்சரி கண்ணம்மா என குறிப்பிட்டு இருந்தார். சினேகாவை இப்படியொரு செல்லப் பெயர் வைத்து தான் பிரசன்னா அழைத்து வருகிறாரா என ரசிகர்கள் அறிந்து ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர்.

    English summary
    GOAT Actress Sneha and Prasanna's London trip photos goes trending: லண்டனுக்கு சுற்றுலா சென்ற பிரசன்னா மற்றும் சினேகாவின் புகைப்படங்கள் டிரெண்டாகி வருகின்றன.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X