விஜய் டிவி சீரியல் நடிகையா இது? பட நடிகைகளுக்கே டஃப் கொடுப்பாங்க போலயே..! | Vijay Tv Serial Actress Aarthi Subash Latest Stunning Photos - Oneindia Tamil
bredcrumb

விஜய் டிவி சீரியல் நடிகையா இது? பட நடிகைகளுக்கே டஃப் கொடுப்பாங்க போலயே..!

By Divya Bala
| Published: Wednesday, May 8, 2024, 13:31 [IST]

நடிகை ஆர்த்தி சுபாஷ் சன் டிவியில் ஒளிபரப்பான பாண்டவர் இல்லம் மூலம் சின்னத்திரையில் அறிமுகம் ஆனார். இவர் மல்லிகா கதாபாத்திரத்தில் நடித்தார். இவர் தற்போது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.

aarthi subash
1/7
பாண்டவர் இல்லம் என்பது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குடும்பம் சார்ந்த தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்த தொடரில் பாப்ரி கோஷ், நரேஷ் ஈஸ்வர், ஆர்த்தி சுபாஷ் மற்றும் குகன் சண்முகம் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
aarthi subash
2/7
கிருத்திகா இந்த சீரியலில் ரேவதியாக நடித்து வருகிறார். இவர் சமூக வலைத்தளங்களில் மிகவும் சுறு சுறுப்பாக இருக்கிறார். ஆர்த்தி மற்றும் க்ரித்திகா இன்ஸ்டாவில் ரீலிஸ் வீடியோக்களை அடிக்கடி பதிவு செய்து வருகின்றனர். இந்த விடீயோக்களை பார்ப்பதற்கே தனி ரசிகர் கூட்டம் உள்ளது.
aarthi subash
3/7
ஆர்த்தி யூடூப்பில் வெப் சீரிஸ்களில் நடித்து சின்ன திரையில் வந்தார். இவர் முதலில் ஆதித்யா டிவியில் அங்காரகா தொடங்கினர். அதன் பின்னர் பாண்டவர் இல்லம் சீரியலில் நடிக வாய்ப்பு கிடைத்தது. சென்னை மீம்ஸ் என்ற யூடூப் சேனலில் சம்சாரம் அது மின்சாரமில் நடித்தார்.
aarthi subash
4/7
பாண்டவர் பூமி தொடர் முடிவடைந்த நிலையில் ஆர்த்தி மாடலிங் செய்து வருகிறார். அவர் அடிக்கடி போட்டோஷூட்கள் செய்து புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிடுகிறார். அவர் யூடுப் சேனல் ஒன்றை வைத்துள்ளார்.
aarthi subash
5/7
இவர் அடிக்கடி சுற்றுலா சென்று வருகிறார். அங்கு எடுக்கும் புகைப்படங்கள், விடீயோக்கள் என தனது யூடுப் சேனல்களில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். மேலும் அங்கு எடுக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார்.
aarthi subash
6/7
ஆர்த்தி சமீபத்தில் துபாயில் மாடர்ன் உடையில் போட்டோஷூட் ஒன்றை செய்துள்ளார். மேலும் இவர் தற்போது யூடுப் ஒன்றில் குட்டி வெப் தொடரில் நடித்து வருகிறார். ' இறைவனாய் தந்த இறைவியே' என்ற தொடரில் நடித்து வருகிறார்.
aarthi subash
7/7
இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வீட்டுக்கு வீடு வாசல் படி என்ற சீரியலில் நடித்து வருகிறார். இவரது நடிப்பை பார்த்து பலரும் பாராட்டி வருகின்றனர். இவர் தற்போது போட்டோஷூட் ஒன்றை செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தை கலக்கி வருகின்றன.
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X