போட்டோஷூட்டில் கலக்கும் 'எதிர்நீச்சல்' ஈஸ்வரி'.. லேட்டஸ்ட் கிளாமர் க்ளிக்ஸ்! | Actress Kaniha Latest Orange Outfit Photos - Oneindia Tamil
bredcrumb

போட்டோஷூட்டில் கலக்கும் 'எதிர்நீச்சல்' ஈஸ்வரி'.. லேட்டஸ்ட் கிளாமர் க்ளிக்ஸ்!

By Chandru
| Published: Wednesday, May 15, 2024, 17:03 [IST]

நடிகை கனிகாவின் லேட்டஸ்ட் வெகேஷன் போட்டோஸ் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

kaniha
1/7
சீரியல்களுக்கு பெயர்போன தொலைக்காட்சி தான் சன் டிவி. இது நம் அனைவருக்கும் தெரிந்ததே. விதவிதமான வித்தியாசமான கதையம்சத்துடன் மக்களை ஈர்த்து வரும் சன் டிவி சீரியலில் தற்போது எதிர்நீச்சல் சீரியலில் பலரின் ஃபேவரைட் லிஸ்டில் ஒன்றாக இருந்து வருகிறது.
kaniha
2/7
அதிலும் இதில் வரும் குணசேகரன் கதாபாத்திரத்தம் உலக ஃபேமஸ் என்றே சொல்லலாம். இன்னும் சொல்லப்போனால் இந்த குணசேகரன் கதாபாத்திரம் தான் அதிகளவு பார்வையாளர்களை ஈர்க்க காரணமாக இருந்தது. இதில் குணசேகரனின் மனைவியாக நடித்திருப்பவர் நடிகை கனிகா. ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
kaniha
3/7
தற்போது சீரியலில் முன்னணி நடிகையாக வலம் வரும் கனிகா இதற்கு முன் வெள்ளித்திரையில் பல முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார். தமிழ் மற்றும் மலையாளத்தில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வந்தவர்.
kaniha
4/7
அஜித், மாதவன், மம்முட்டி உள்ளிட்ட ஸ்டார் நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். சினிமாவில் ஆக்ட்டிவாக இருந்த கனிகா, கடந்த 2008 ஆம் ஆண்டு ஷியாம் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின் சினிமாவில் தலையை காட்டாமல் இருந்து வந்தார்.
kaniha
5/7
பின்னர் நீண்ட இடைவெளிக்கு பின் தமிழில் ரீ-என்ட்ரி கொடுத்த கனிகாவுக்கு சின்னத்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் 'எதிர்நீச்சல்' சீரியலில் ஈஸ்வரி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
kaniha
6/7
சீரியலில் செம பிஸியாக இருக்கும் கனிகா சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். அவ்வப்போது கணவர், குழந்தையுடன் வெகேஷனை என்ஜாய் பண்ணும் புகைப்படங்களை போஸ்ட் செய்து ரசிகர்களை கவனத்தை ஈர்த்து வருகிறார்.
kaniha
7/7
அந்தவகையில் கனிகா, கிளாமர் உடையில் வெகேஷனை என்ஜாய் பண்ணும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வெளியாகி ரசிகர்களை ஈர்த்து வருகிறது.
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X