Actress Sneha: உடை குறித்து எழுந்த விமர்சனம்.. அதிரடி முடிவு எடுத்த சினேகா! | actress sneha throwback interview trending on social media - Tamil Filmibeat
    twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Actress Sneha: உடை குறித்து எழுந்த விமர்சனம்.. அதிரடி முடிவு எடுத்த சினேகா!

    |

    சென்னை: புன்னகை அரசி சினேகா தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் நடித்துள்ளார். பல முன்னணி நடிகர்களுடன் நடித்து டாப் நடிகை என்று பெயர் எடுத்த, சினேகா, தன் உடை குறித்து எழுந்த கருத்தால், ஒரு முடிவை எடுத்துள்ளதாக கூறிய பேட்டி தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

    நடிகை சினேகாவின் அட்டைப்பட போட்டோவைப் பார்த்து மணிரத்தினத்திடம் உதவி இயக்குநராக இருந்த சுசி கணேஷ் இயக்கிய விரும்புகிறேன் படத்தில் பிரசாந்திற்கு ஹீரோயினாக ஒப்பந்தமானார். முதல் படம் வெளியான போதே சினேகாவிற்கு நல்ல பெயர் கிடைத்து குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய அளவில் பிரபலமானார். இவர் எந்த அளவிற்கு பிரபலமானாரோ அந்த அளவிற்கு கிசுகிசு மற்றும் சர்ச்சையிலும் சிக்கினார். ஒரு கட்டத்தில் ஸ்ரீகாந்தை திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் கிசுகிசு பரவியது.

    actress sneha throwback interview trending on social media

    நடிகை சினேகா: சினிமாவில் பல ஏற்றத்தாழ்வுகள் பல சர்ச்சைகளை சினேகா சந்தித்து உள்ளார். தனுஷ் நடித்த புதுப்பேட்டை படத்தில் ஒரு விவகாரமான கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார். அந்த படத்தில் நடிக்க ஏன் ஒத்துக்கொண்டேன் என்று அழுத போது தனுஷ் அவருக்கு ஆறுதல் கூறி, இந்த கதாபாத்திரம் ரொம்ப நல்ல பெயர் வாங்கித் தரும் என்றார். அதே போல அந்த படம் அவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது. இதை சினேகாவே பல பேட்டியில் கூறியுள்ளார். இதையடுத்து, அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் பிரசன்னாவுடன் சேர்ந்து நடித்த போது, இருவருக்கும் இடையே காதல் மலர, இரு குடும்பத்தாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    கோட் படத்தில்: திருமணத்திற்கு பின் தொடர்ந்து திரைப்படத்தில் நடித்து வரும் சினேகா, வெங்கட்பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் கோட் படத்தில் நடித்து வருகிறார். விஜய் அப்பா மகன் என இரண்டு விதமான கேரக்டரில் நடித்து வரும் நிலையில், அப்பா கேரக்டருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர்கள் இருவரும் வசீகரா படத்திற்கு பிறகு இந்த படத்தில் சேர்ந்து நடிக்கின்றனர். இப்படம் செப்டம்பர் 5ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது.

    இப்படி ஒரு கொள்கையா: இந்நிலையில், நடிகை சினேகாவின் பழைய பேட்டி ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அந்த பேட்டியில், ஒருமுறை பிரபல பத்திரிக்கையில் அடிக்கடி ஒரே உடையை சினேகா போடுகிறார், அவருக்கு அணிய வேறு உடைகள் இல்லை என்றெல்லாம் கூறியிருந்தார்கள். நிறைய விமர்சனங்கள் எனது ஆடை குறித்து வந்தது, இதனாலேயே நான் போட்ட உடையை மீண்டும் அணிய மாட்டேன். ஒரு உடையை போட்டுவிட்டு அதை தெரிந்தவர்களுக்கோ, என்னுடைய நண்பர்களுக்கோ கொடுத்து விடுவேன் என்று பேசி உள்ளார். இந்த பேட்டியை பார்த்த ரசிகர்கள் இதெல்லாம் ஒரு விஷயமா என்று கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

    English summary
    actress sneha throwback interview trending on social media, நடிகை சினேகாவின் பழைய பேட்டி ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X