IPL 2024: பிளே ஆஃப் சுற்று அட்டவணை.. எந்தெந்த அணிகள் மோதல்? எத்தனை மணிக்கு போட்டிகள் துவங்கும்? | IPL 2024 Play-Off Schedule, Date, and Timings Before the Last Two League Matches - myKhel Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IPL 2024: பிளே ஆஃப் சுற்று அட்டவணை.. எந்தெந்த அணிகள் மோதல்? எத்தனை மணிக்கு போட்டிகள் துவங்கும்?

பெங்களூரு : 2024 ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு நான்கு அணிகள் முன்னேறி உள்ளன. இந்த நிலையில் பிளே ஆஃப் சுற்றுக்கான போட்டி அட்டவணை குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.

தற்போது பிளே ஆப் சுற்றுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் முன்னேறி உள்ளன. இந்த நான்கு அணிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை உறுதி செய்துள்ளது. அதேபோல ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்தை உறுதி செய்துள்ளது.

IPL 2024 Play-Off Schedule Date and Timings Before the Last Two League Matches

இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே போட்டி நிலவி வருகிறது. இன்று நடைபெற உள்ள கடைசி இரண்டு லீக் போட்டிகளின் முடிவில் எந்த அணி இரண்டாவது இடத்தை பிடிக்கப் போகிறது என்பது தெரிந்து விடும்.

புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆஃப் சுற்றின் முதல் தகுதி போட்டியில் விளையாடும். அதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி விடும். மூன்று மற்றும் நான்காவது இடங்களில் இடம்பெறும் அணிகள் தகுதி நீக்கப் போட்டியில் விளையாடும். அதில் தோல்வி அடையும் அணி ஐபிஎல் தொடரை விட்டு வெளியேறும். வெற்றி பெறும் அணி இரண்டாவது தகுதி போட்டிக்கு செல்லும்.

முதல் தகுதிப் போட்டியில் தோல்வியடைந்த அணியும், தகுதி நீக்கப் போட்டியில் வெற்றி பெற்ற அணியும் இரண்டாவது தகுதிப் போட்டியில் மோதும். இதன் முடிவில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும். புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இடம்பெறும் அணிகளுக்கு இரண்டு வாய்ப்புகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் அடிப்படையில் போட்டி அட்டவணை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. அனைத்து போட்டிகளும் இரவு 7.30 மணிக்கு தொடங்கும்.

மே 22 - தகுதி நீக்கப் போட்டி (Eliminator) - ராஜஸ்தான் ராயல்ஸ் (அல்லது) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் X ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

மே 22 - தகுதி நீக்கப் போட்டி (Eliminator) - ராஜஸ்தான் ராயல்ஸ் (அல்லது) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் X ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

மே 24 - 2வது தகுதிப் போட்டி (Qualifier 2) - முதல் தகுதிப் போட்டி தோல்வியாளர் X தகுதி நீக்கப் போட்டி வெற்றியாளர்

மே 26 - இறுதிப் போட்டி - முதல் தகுதிப் போட்டி வெற்றியாளர் X 2வது தகுதிப் போட்டி வெற்றியாளர்

Story first published: Sunday, May 19, 2024, 10:01 [IST]
Other articles published on May 19, 2024
English summary
IPL 2024 Play-Off Schedule, Date, and Timings Before the Last Two League Matches
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X