காதல், திருமணம், பல ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த பின் விவாகரத்து செய்த தமிழ் சினிமா நட்சத்திரங்கள் | Dhanush - Aishwarya, GV Prakash - Saindhavi and more Tamil Film Stars Who Were Divorced After Decades of Togetherness – FilmiBeat
    twitter
    X
    Home சினி தரவரிசை

    காதல், திருமணம், பல ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த பின் விவாகரத்து செய்த தமிழ் சினிமா நட்சத்திரங்கள்

    Author Sakthi Harinath | Updated: Friday, May 24, 2024, 02:04 PM [IST]

    காதல், திருமணம், பல ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த பின் விவாகரத்து செய்த தமிழ் சினிமா நட்சத்திரங்கள் - முழு தகவல்கள் இதோ. தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் காதலித்து நவம்பர் 18, 2004 அன்று திருமணம் செய்து கொண்டனர். இந்த ஜோடி 18 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு இருவரும் 2022 இல் பிரிந்தனர். தனுஷ் - ஐஸ்வர்யா நட்சத்திர ஜோடி போல் ஜிவி பிரகாஷ் - சைந்தவி ஜோடிகளும் 11 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு இருவரும் 2024 பிரிந்துள்ளனர். பல ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த பின் விவாகரத்து செய்த தமிழ் சினிமா நட்சத்திர ஜோடிகள் பற்றிய முழு லிஸ்ட் இதோ.

    cover image

    1

    அரவிந்த் சுவாமிக்கும் - காயத்ரி ராமமூர்த்திக்கும் 1994ல் காதல் திருமணம் நடந்தது. ஆனால் இருவரும் 2010 இல் பிரிந்தனர், பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு தங்கள் திருமண வாழ்க்கையை முடித்துக்கொண்டனர். அதன்பிறகு குழந்தைகளின் பொறுப்பை அரவிந்த் ஏற்றுக்கொண்டார். பின்னர் 2012 இல், அரவிந்த் சாமி அபர்ணா முகர்ஜியை மணந்தார்.

    2

    பிரகாஷ் ராஜ் மற்றும் லலிதா குமாரி 1994 இல் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இருவரும் 2009ல் கருத்து வேறு பாடு காரணமாக விவாகரத்து செய்து கொண்டனர். பின்னர் 2010ல் பிரகாஷ் ராஜ் நடன இயக்குனர் போனி வர்மாவை திருமணம் செய்து கொண்டார்.

    3

    தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்-ற்கும் 6 மாத காதலுக்கு பின் நவம்பர் 18, 2004 அன்று திருமணம் நடந்தது. ஆனால் 18 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 2022 இல் பிரிந்தனர். 

    4

    பிரபுதேவா மற்றும் ரம்லத் இருவரும் 1995ல் காதல் திருமணம் செய்துக்கொண்டனர். இஸ்லாமிய பெண்ணான ரம்லத், பிரபுதேவாவை மணக்க தனது பெயரினை லதா என மாற்றிக்கொண்டார். ஆனால் 2011ல் இருவரும் சில காரணங்களால் விவாகரத்து செய்து பிரிந்தனர்.

    5

    சரத்குமாரின் முதல் மனைவி சாயாதேவி. இவரின் முதல் திருமணம் 1984 இல் நடந்தது. ஆனால் 2000 ஆம் ஆண்டு சாயாதேவியும் சரத்குமாரும் விவாகரத்து செய்து கொண்டனர். பின்னர் சரத்குமார் நடிகை ராதிகாவை 2001ல் திருமணம் செய்து கொண்டார்.

    6

    இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான சுரேஷ் சந்திர மேனனுக்கும் ரேவதிக்கும் 1986 இல் திருமணம் நடந்தது. ஆனால் இருவரும் 2013ல் கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுள்ளனர். தற்போது போது வரை இருவரும் தனிமையில் வாழ்ந்து வருகின்றனர்.

     

    7

    பார்த்திபனுக்கும் சீதாவுக்கும் 1991ல் திருமணம் நடந்தது. நீண்ட நாள் காதலுக்கு பிறகு நட்சத்திர திருமணம் நடந்தது. ஆனால் 2002ல் இருவரும் கருத்துவேறுபாடு காரணத்தால் பிரிந்தனர். விவாகரத்திற்கு பிறகு பார்த்திபன், சீதா வேறு திருமணம் செய்து கொள்ளவில்லை.சமீபத்தில் இவரது மகளுக்கு திருமணம் நடந்துள்ளது. 

    ஜிவி பிரகாஷ் - சைந்தவி

    ஜிவி பிரகாஷ் - சைந்தவி

    8

    தமிழ் சினிமாவில் நடிகர் மற்றும் இசையமைப்பாளராக பிரபலமாகியுள்ள ஜி வி பிரகாஷ் குமார் தன்னுடன் படித்த சைந்தவி என்பவரை 2013ல் காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. 11 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு ஜி வி பிரகாஷ் குமார் - சைந்தவி இருவரும் விவாகரத்து பெற்றுள்ளதாக 2024ல் அறிவித்துள்ளனர்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X