சாணக்கிய நீதி படி இந்த 5 நபர்களில் ஒருவர் உங்களுக்கு எதிரியானாலும் உங்கள் மரணத்தை யாராலும் தடுக்க முடியாதாம்! | Chanakya Niti: Never Become Enemy With These People in Tamil - Tamil BoldSky
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சாணக்கிய நீதி படி இந்த 5 நபர்களில் ஒருவர் உங்களுக்கு எதிரியானாலும் உங்கள் மரணத்தை யாராலும் தடுக்க முடியாதாம்!

|

Chanakya Niti: மதம், அரசியல், பொருளாதாரம், சமூகவியல், அரசியல் அறிவியல் என அனைத்துப் பாடங்களிலும் அறிவு பெற்றிருந்த சாணக்கியர் பண்டைய இந்தியாவின் சிறந்த அறிஞராவார். சாணக்கியரால் எழுதப்பட்ட பல நூல்கள் இன்றும் மனித குலத்திற்குப் பயன்படுகின்றன.

சாணக்கிய நீதி என்ற புத்தகத்தில் அவர் தனது கொள்கைகளைதொகுத்துள்ளார். அவர் குறிப்பிடும் ஒவ்வொரு கொள்கையும் மனிதனை வாழ்க்கையின் இலக்கை அடையத் தூண்டுகிறது. இவற்றைக் கவனத்தில் கொண்டால் பலவிதமான பிரச்சனைகளில் இருந்து ஒருவரைக் காப்பாற்றலாம்.

Chanakya Niti Never Become Enemy With These People in Tamil

எந்த ஒரு சர்ச்சையிலும் ஈடுபடக்கூடாது என்பதே அமைதியான வாழ்க்கையின் அடிப்படைக் கொள்கை. ஆனால், தெரிந்தோ தெரியாமலோ பலர் அதில் சிக்குகின்றனர். இதில் சில விஷயங்கள் சாணக்கிய நீதியில் கூறப்பட்டுள்ளது. எதிரிகளை உருவாக்குவதில் கவனமாக இருக்க வேண்டும்.

வாழ்க்கையில் சிலருடன் பகைமை கொள்ளக் கூடாது என்கிறார் சாணக்கியர். அவர்களுடன் பகைமை பாராட்டுவது என்பது உங்களை ஆபத்தில் சிக்க வைக்கும். சாணக்கியரின் கூற்றுப்படி நீங்கள் யாரிடமெல்லாம் பகை வளர்த்துக் கொள்ளக்கூடாது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

அரசர் அல்லது மேலதிகாரி

சாணக்கியரின் கூற்றுப்படி, ஒரு நபர் ஒருபோதும் அரசருடன் அல்லது அரசுடன் நேரடியாக சண்டையிடக்கூடாது. அது உங்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். நீங்கள் சக்திவாய்ந்த பதவியில் இல்லாதவரை, மூத்த அதிகாரிகளிடம் தவறாகப் பேசாதீர்கள். அவர்களுடனான பகை உங்களுக்கு தீங்கு விளைவிக்கும்.

ஆரோக்கியம்

ஒருவரது ஆரோக்கியமே அவருடைய மிகப்பெரிய செல்வம் என்று சாணக்கியர் கூறுகிறார். தன் உடல் நலத்தின் மீது அக்கறை இல்லாமல் தன்னைப் பற்றி கவலைப்படாமல், இறுதியில் மரணத்தைத் தழுவுகிறார். ஒருவர் தன் உடல்நிலையைப் பார்க்காமல் பணத்தின் பின்னால் ஓடினால் அவருக்குப் பணமும் கிடைக்காது, நல்ல ஆரோக்கியமும் கிடைக்காது. உணவு மற்றும் பானங்களில் கவனக்குறைவு இறுதியில் மரணத்திற்கு வழிவகுக்கும்.

உங்களை விட வலிமையானவர்

சாணக்கியர் கூறுகிறார், ஒரு வலிமையான நபர் தன்னை வலிமையாக்க யாருக்கும் தீங்கு செய்யலாம். எனவே, அத்தகைய நபருடன் ஒருபோதும் பகைமை கொள்ளாதீர்கள். பொருளாதாரரீதியாகவோ அல்லது உடல்ரீதியாகவோ சக்தி வாய்ந்த ஒருவருடன் பகைமை கொள்வது மரணத்தை அழைப்பதற்கு சமம் என்று சாணக்கியர் கூறுகிறார்.

ஆயுதம் ஏந்தியவர்கள்

கையில் ஆயுதம் ஏந்தியவர்களை, அதாவது ஆயுதம் வைத்திருப்பவரை எதிர்க்கவோ, சண்டையிடவோ கூடாது. ஏனெனில் கோபம் வரும் போது சில சமயம் எதிரியை ஆயுதம் ஏந்தி கொல்லவும் துணிவார்கள். எனவே உங்களால் அவர்களை எதிர்க்க முடிந்தாலும் ஆயுதம் ஏந்தியவர்களை எதிர்ப்பது புத்திசாலித்தனமான செயலாக இருக்காது.

உங்கள் ரகசியங்களை நன்கு அறிந்தவர்கள்

உங்கள் எல்லா ரகசியங்களையும் அறிந்த நபரை எதிர்க்காதீர்கள். ஏனெனில் விபீஷணன் தான் இராமனுக்கு இராவணனின் ரகசியங்களைக் கூறினார். இதனால் தான் ராவணன் போரில் கொல்லப்பட்டார். எனவே உங்கள் ரகசியங்களை அறிந்தவர்களை எப்போதும் உங்கள் எதிரிகளின் பக்கம் செல்ல அனுமதிக்காதீர்கள்.

English summary

Chanakya Niti: Never Become Enemy With These People in Tamil

Chanakya Niti says you must be careful not to make enemies. Chanakya advises against holding grudges against such individuals in life. If you hate them, it will lead to trouble for you.
Story first published: Sunday, May 12, 2024, 6:01 [IST]
Desktop Bottom Promotion