அமெரிக்காவில் தயாரான தமிழ்த் திரைப்படம் "தி வெர்டிக்ட்" !! | tamil cinema news the verdict movie first look update
search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    அமெரிக்காவில் தயாரான தமிழ்த் திரைப்படம் தி வெர்டிக்ட் !!
    X

    அமெரிக்காவில் தயாரான தமிழ்த் திரைப்படம் "தி வெர்டிக்ட்" !!

    • தி வெர்டிக்ட் படத்திற்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
    • இந்த படத்தின் மூலம் ஆதித்யா ராவ் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

    அக்னி எண்டர்டெயின்மெண்ட் அதன் சென்னை துணை நிறுவனத்துடன் இணைந்து கோலிவுட்டில் தனது முதல் திரைப்படத்தை அறிவித்து இருக்கிறது. இத்திரைப்படம் முழுக்க முழுக்க அமெரிக்காவின் டெக்சாஸ், ஆஸ்டினில் படமாக்கப்பட்டுள்ளது.

    அக்னி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் முதல் திரைப்படமாக உருவாகும் "தி வெர்டிக்ட்" கோர்ட்ரூம் டிராமா, திரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது. இப்படத்தின் தயாரிப்பாளர்கள் பிரகாஷ் மோகன்தாஸ், இயக்குநர் கிருஷ்ணா சங்கர் டெக்சாஸில் வசிப்பவர்கள்.

    இப்படம் முழுக்க முழுக்க அமெரிக்காவின் ஆஸ்டின், டெக்சாசில் படமாக்கப்பட்ட முதல் சர்வதேச இந்தியத் திரைப்படம் ஆகும். இந்த படம் முழுக்க முழுக்க 23 நாட்களில் படமாக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த படத்தில் நடிகை சுஹாசினி மணிரத்னம், வரலக்ஷ்மி சரத்குமார், ஸ்ருதி ஹரிஹரன், வித்யுலேகா ராமன் & பிரகாஷ் மோகன்தாஸ் ஆகியோரோடு உள்ளூர் அமெரிக்கக் கலைஞர்களும் ஐந்து முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    அரவிந்த் கிருஷ்ணா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, சதீஷ் சூர்யா படத்தொகுப்பு செய்துள்ளார். பிரபல இளம் பாடகர் ஆதித்யா ராவ் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். சினேகா மற்றும் பிரசன்னா தம்பதியினர் "தி வெர்டிக்ட்" படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×