Former AIADMK Minister Jayakumar Condemns Chief Minister Stalin's Alleged Intimidation Tactics Towards Journalists | "சேடிஸ்ட் முதல்வர் ஸ்டாலின்" அதிமுகவின் ஜெயக்குமார் கடும் விமர்சனம்! ஏன் News in Tamil

"சேடிஸ்ட் முதல்வர் ஸ்டாலின்" அதிமுகவின் ஜெயக்குமார் கடும் விமர்சனம்! ஏன்

பத்திரிக்கையாளர்கள் மீது திமுக அரசு மிக கடுமையாக நடந்து கொள்வதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முதலமைச்சர் ஸ்டாலினை சேடிஸ்ட் முதல்வர் ஸ்டாலின் என விமர்சித்துள்ளார்.  

Written by - S.Karthikeyan | Last Updated : May 12, 2024, 08:06 AM IST
  • திமுக ஆட்சியில் மிரட்டப்படும் பத்திரிக்கையாளர்கள்
  • பத்திரிக்கையாளர் பெலிக்ஸ் ஜெரால்டு கைதுக்கு கண்டனம்
  • முதலமைச்சர் சேடிஸ்ட் போல் நடந்து கொள்வதாக விமர்சனம்
"சேடிஸ்ட் முதல்வர் ஸ்டாலின்" அதிமுகவின் ஜெயக்குமார் கடும் விமர்சனம்! ஏன் title=

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக அரசு மற்றும் காவல்துறையினரை கடுமையாக விமர்சித்த சவுக்கு சங்கர் பெண் காவலர்கள் குறித்து அநாகரீகமாக பேசிய புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது இப்போது ஆறுக்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளது. கோவை சைபர் கிரைம் போலீஸாரால் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் சென்னை சைபர் கிரைம் காவல்துறை உள்ளிட்ட பல்வேறு ஊர்களைச் சேர்ந்த காவல்துறையினரால் வரிசையாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார். சவுக்கு சங்கர் கைதுக்கு ஆதரவாகவும், எதிர்ப்பு தெரிவித்தும் பலர் கருத்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர். இதனிடையே, யூடியூப் சேனல் நடத்தி வந்த பத்திரிக்கையாளர் பெலிக்ஸ் ஜெரால்டு தமிழ்நாடு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

மேலும் படிக்க | சென்னையில் நாட்டு வெடிகுண்டு தயாரித்த வாலிபர்கள்! சிறுவன் உள்பட 3 பேர் கைது..

இதற்கு அதிமுக ஆட்சியின்போது அமைச்சராக இருந்த ஜெயக்குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். எக்ஸ் பக்கத்தில் இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், திமுக ஆட்சியில் பத்திரிக்கையாளர்கள் மிரட்டப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார். " பொய் வழக்கு போடுவது ஸ்டாலினுக்கு ஒன்றும் புதிதல்ல!. என் மீது எத்தனையோ பொய் வழக்குகள் போட்டு‌ என்னை அச்சுறுத்த எண்ணியது இந்த விடியா திமுக அரசு!
வெளியே வந்து இன்னும் கூடுதலாக தான் இந்த அரசை எதிர்த்து வருகிறேன்.

தற்போது ஊடக ஆசிரியர் திரு.பெலிக்ஸ் ஜெரால்டு அவர்களை டெல்லி சென்று கைது செய்துள்ளது எந்த‌ அளவிற்கு ஊடகத்தின் மீதான அச்சத்தில் ஊடக சுதந்திரத்தை ஸ்டாலின் அரசு முடக்க நினைக்கிறது என்பதை நாம் அறிய முடிகிறது. சாட்டை‌ துரைமுருகன்,மாரிதாஸ்,அருள்மொழிவர்மன்,சவுக்கு சங்கர்,பெலிக்ஸ் ஜெரால்டு ஆகியோர் எங்கள் அரசின் நிர்வாகத்தின் மீது எத்தனையோ விமர்சனங்களை முன்வைத்தனர்.
அதை சரி செய்யவே எங்கள் அரசு முற்பட்டதே தவிர அவர்களை முடக்கவோ அடிக்கவோ எண்ணவில்லை!

இன்று பெலிக்ஸ் போன்றோருக்கு ஏற்பட்டுள்ள இந்த நியாயமற்ற நிலை நாளை நான் மேற்கோள் காட்டியுள்ள தனி மனித பத்திரிக்கையாளர்களுக்கும் நிகழ வாய்ப்புள்ளது!. பாதி ஊடகங்களை உண்மையை போட கூடாது என மிரட்டி விட்டனர். மீதி ஊடகங்களையும் மிரட்டி பணிய வைக்க முயற்சி எடுத்துள்ளார்  சேடிஸ்ட் முதல்வர் ஸ்டாலின். பழிவாங்குவதை விட்டுவிட்டு மக்களுக்கு பயனுள்ள வகையில் எதுவும் செய்ய பாசிச முதல்வருக்கு நேரமில்லை‌ போல. விரைவில் யூடியூப் நிறுவனத்தின் மீதும் ஏதாவது நடவடிக்கை எடுக்கலாமா என ஆலோசனை நடத்தினாலும் நடத்துவார்!" என கூறியுள்ளார். 

மேலும் படிக்க | மதுரையில் பொளந்தெடுக்கும் கனமழை... சாலையில் தண்ணீர் அதிகமாக தேங்க என்ன காரணம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News